இந்தியாவை மத சுதந்திரத்திற்கு எதிரான நாடாக அறிவிக்க வேண்டும்: அமெரிக்க அரசுக்கு சர்வதேச ஆணையம் வலியுறுத்தல்

புதுடெல்லி: சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் அமெரிக்காவில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையம் 2025ம் ஆண்டிற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத சுதந்திர நிலைமைகள் தொடர்ந்து மோசடைந்து வருகிறது. எனவே, இந்தியாவை மத சுதந்திரத்திற்கு எதிரான நாடாக அமெரிக்கா வகைப்படுத்தி குறிப்பிட்ட கவலைக்குரிய நாடுகள் பட்டியலில் சேர்க்க வேண்டும். கடந்த 2023ம் ஆண்டு காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுவை அமெரிக்காவில் கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக முன்னாள் இந்திய அதிகாரி விகாஸ் யாதவ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விகாஸ் யாதவ் போன்ற தனிநபர்கள்,ரா ஆகிய அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும். அவர்களுடைய சொத்துக்களை முடக்க வேண்டும்.

அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுப்பது என்பது உள்பட மத சுதந்திரத்தை மீறும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தியாவை மத சுதந்திரத்திற்கு எதிராக அத்துமீறலில் ஈடுபடும் நாடாக வகைப்படுத்த வேண்டும். கும்பல் வன்முறைகள், மத தலைவர்கள் கைது உள்ளிட்டவை மத சுதந்திரத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அத்துமீறல்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா எதிர்ப்பு: ஆணையத்தின் அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்த வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்,‘‘ சர்வதேச மத சுதந்திரத்திற்கான ஆணையம் ஒரு தலைப்பட்சமாக அரசியல் நோக்கத்துடன் செயல்படுகிறது’’ என கூறினார்.

* போதை மருந்து தயாரித்தலில் முன்னணி நாடு இந்தியா
சட்டவிரோத போதை மருந்து தயாரித்தலில் முன்னணி நாடாக இந்தியா மற்றும் சீனா உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. பெண்டானில் மற்றும் ஓபியாய்டு மருந்துகள் அமெரிக்காவிற்கு கடத்தப்படும் மிகவும் ஆபத்தான மருந்துகளாக இருக்கின்றன. சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கான மையமாக செயல்படுகின்றன. போதை மருந்துக்கான முதன்மை ஆதார நாடாக சீனா உள்ளது, அதைத் தொடர்ந்து இந்தியாவும் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

The post இந்தியாவை மத சுதந்திரத்திற்கு எதிரான நாடாக அறிவிக்க வேண்டும்: அமெரிக்க அரசுக்கு சர்வதேச ஆணையம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: