35 திருத்தங்களுடன் நிதி மசோதா நிறைவேற்றம்

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து, மக்களவையில் நிதி மசோதா கொண்டு வரப்பட்டது. இதன் மீதான விவாதத்தை தொடர்ந்து, நேற்று இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதில், ஆன்லைன் விளம்பரங்களுக்கு 6 சதவீத டிஜிட்டல் வரியை ரத்து செய்வது உள்ளிட்ட 35 திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

அடுத்ததாக நிதி மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்படும். மக்களவையில், நிதி மசோதா மீதான விவாதத்தின் போது பேசிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘ புதிய வருமான வரி சட்ட மசோதா தேர்வுக்குழு ஆய்வில் உள்ளது. இக்குழு மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் அறிக்கை சமர்பிக்கும். அதைத் தொடர்ந்து மசோதா மீதான விவாதம் மழைக்கால கூட்டத்தில் தொடங்கும்’’ என்றார்.

The post 35 திருத்தங்களுடன் நிதி மசோதா நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: