அமைச்சர் கே.என்.நேரு: கடந்த ஆட்சியில், 100 சதவிகிதம் முதல் 200 சதவிகிதம் வரையில் உயர்த்தப்பட்ட அந்த சொத்து வரியானது, தேர்தலை முன்னிட்டு நிறுத்திவைக்கப்பட்டது. மீண்டும், முதல்வர் தலைமையில் ஆட்சிபொறுப்பேற்ற போது, அந்தந்தப் பகுதிகளில் இடத்திற்கான மதிப்பீடு எவ்வளவு இருக்கின்றனவோ, அதற்கேற்றார் போன்று வரி விதிக்கப்படவேண்டுமென்றும், இடத்தின் மதிப்பு கூடுதலாக இருந்தால் வரி கூடுதலாகவும், இடத்தின் மதிப்பு குறைவாக இருந்தால் வரி குறைவாகவும், மண்டல ரேட் அப்படையில் ஒவ்வோர் இடத்திலும் அதற்கேற்றவாறு வரி விதிக்க வேண்டும் என்றும் 15-வது நிதிக் குழுவிலிருந்து எங்களுக்கு ஒரு உத்தரவு வருகிறது. அதை முதல்வர் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த அடிப்படையில் 600 சதுர அடிக்குக்கு குறைவாக வைத்திருப்பவர்களுக்கு வரியில் எந்த மாற்றமும் இல்லை. 600 சதுர அடி முதல் 1,000 சதுர அடி வரையில் வைத்திருப்பவர்களுக்கு 25 சதவிகிதம் முதல் 30 சதவிகிதம் வரை வரி உயர்த்தப்பட்டது. 1,000 சதுர அடி முதல் 1,800 சதுர அடி வரை வைத்திருப்பவர்களுக்கு 50 சதவிகிதமும், 2,400 சதுர அடிக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு 100 சதவிகிதம் என்ற வகையில் உயர்த்தப்பட்டது. இந்தச் சட்டம் எதற்கு என்றால், சென்னை போன்ற பகுதிகளிலும், பிற பகுதிகளிலும், 18 ஆண்டுகள், 20 ஆண்டுகள் வரி உயர்த்தப்படாமல் அப்படியே இருந்தபோது, அவற்றை சமச்சீர் செய்து கொண்டு வருகிறபோது, ஒரு வரியை நிர்ணயம் செய்து, அது, ஒவ்வொரு ஆண்டும் 6 சதவிகிதம் கூடுதலாகப்பட வேண்டுமென்று சட்டம் இயற்றப்பட்டது. அப்படி பார்த்தால், மும்பையில், வரி ரூ.1,78,000 விதிக்கப்படுகிறதென்றால், தமிழ்நாட்டில் ரூ.800 தான் வரி விதிக்கப்படுகிறது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது ஓரத்தநாடு எம்எல்ஏ ஆர்.வைத்தியலிங்கம் (அதிமுக) பேசுகையில், “தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜ சோழனுக்கு 1972-ல் அன்றைய முதல்வர் சிலை வைத்தார். உள்ளே வைக்க முடியாது என்று தொல்லியல் துறை சொன்னதால் வெளியிலே வைத்தார்கள். மாமன்னன் கப்பற்படையை உலகுக்கே அறிமுகப்படுத்தியவர் தெற்கு ஆசியாவையே வென்றவன். இந்திய கடற்படைக்கே ராஜராஜ சோழன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. 216 அடி உயரமுள்ள பெரிய கோயிலை கட்டிய அவருக்கு 100 அடி சிலை வைக்க வேண்டும்” என்றார்.
அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு: மன்னர்களின் புகழை போற்றி பாராட்டுகின்ற அரசு திராவிட மாடல் அரசு என்பதற்கு ஒப்பாக 1000 ஆண்டு சதய விழாவை எடுத்த ஆட்சி கலைஞரின் ஆட்சி. உறுப்பினரின் கோரிக்கைக்கான சாத்திய கூறுகள் ஆராயப்பட்டு, வாய்ப்பிருந்தால் நிச்சயம் சிலை அமைப்பதற்கு உண்டான நடவடிக்கையை இந்த அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் மேற்கொள்ளும்” என்றார். இவ்வாறு விவாதம் நடந்தது.
The post சொத்துவரி உயர்வு ஏன்? அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் appeared first on Dinakaran.