மதுரையைச் சேர்ந்தபிரபல கராத்தே பயிற்சியாளரும் நடிகருமான ஹுசைனி (60) காலமானார் . கே.பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்தில் அறிமுகமான ஷிஹான் ஹுசைனி, விஜய் நடித்த ‘பத்ரி’ திரைப்படத்தில் கராத்தே மாஸ்டராக நடித்திருந்தார்.
இந்நிலையில் இவருக்கு இரத்தப் புற்றுநோய் மற்றும் அப்லாஸ்டிக் அனீமியா இருப்பது உறுதியானது. தனது உடல்நிலை குறித்துப் பேசிய அவர், தனது முன்னாள் மாணவர்களான பவன் கல்யாண் மற்றும் விஜய் ஆகியோரிடம் உதவி கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகக் கூறினார்.
தனக்கு தினமும் இரண்டு யூனிட் ரத்தம் தேவைப்படுவதாகவும், தனது மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க தனது பயிற்சி மையத்தை விற்க முடிவு செய்துள்ளதாகவும் ஹுசைனி தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு துணை முதல்வர் உதயநிதி சார்பில் உதவி செய்யப்பட்டது.
கடந்த 22 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷிகான் ஹுசைனி சிகிச்சை பலனின்றி நள்ளிரவு 1.45 மணியளவில் உயிரிழந்தார். முன்னதாக ஹுசைனி தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை பெசன்ட் நகரில் உள்ள வில்வித்தை சங்கத்தில் இன்று மாலை 7 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்படும் அவரது உடல் பின்னர் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post பிரபல கராத்தே பயிற்சியாளரும் நடிகருமான ஹுசைனி (60) காலமானார் appeared first on Dinakaran.