டேட்டா நுகர்வில் இதுவரை சாதனையாக இருந்த கால்பந்து போட்டியை கிரிக்கெட் போட்டி விஞ்சிவிட்டது. இந்தியா – நியூசிலாந்து இடையே நடந்த சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியை பல கோடி ரசிகர்கள் கண்டுகளித்தனர். நேரில் பார்த்தவர்கள், டிவியில் பார்த்தவர்கள் தவிர செல்போன், டேப், லேப்டாப்பிலும் பல கோடி பேர் கண்டு ரசித்தனர். செல்போன், டேப் உள்ளிட்டவற்றில் போட்டியை கண்டு ரசிக்க 100 கோடி ஜிபி டேட்டாவை ரசிகர்கள் பயன்படுத்தியுள்ளனர். 5 முதல் 6 மணி நேரம் நடைபெறும் ஒரு கிரிக்கெட் போட்டிக்கு 100 கோடி ஜிபி டேட்டா நுகரப்பட்டது உலக சாதனையாக அமைத்துள்ளது.
The post ஒரே ஒரு போட்டியை செல்போனில் பார்க்க 100 கோடி ஜிபி டேட்டா பயன்படுத்தி கிரிக்கெட் ரசிகர்கள் உலக சாதனை..!! appeared first on Dinakaran.