கோடை காலத்தில் தடையில்லாமல் சீரான மின் விநியோகம் செய்ய ஏற்பாடு: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை: கோடை காலத்தில் தடையில்லாமல் சீரான மின் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யபப்ட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோடைகால மின்தேவை குறித்து சென்னையில் அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆலோசனைநடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; கோடைக்காலத்தில் 22,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படலாம். எந்த தடையும் இல்லாமல் சீரான மின்விநியோகம் வழங்குவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் 78,000 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல், மே மாதங்களுக்கு கூடுதலாக டெண்டர் இருக்கிறது. 2030-க்குள் மின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். 6,000 மெகாவாட் அளவிற்கு கூடுதலாக மின்தேவை இருக்கும் என்பதால் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

2030க்குள் தமிழ்நாட்டின் மின்உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. எல்லா துறைகளுக்கும் பாராட்டு இருக்கும்; மின்வாரியத்திற்கு விமர்சனம் இல்லாமல் இருந்தால் அதுதான் பாராட்டு என்று கூறினார்.

 

The post கோடை காலத்தில் தடையில்லாமல் சீரான மின் விநியோகம் செய்ய ஏற்பாடு: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: