வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை தீர்மானம்!

சென்னை: வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை தனித் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஒன்றிய அரசு கொண்டு வரும் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு தொடர்ந்து திமுக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக் கூட்டத்திலும் வக்ஃபு வாரிய மசோதாவுக்கு திமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

வக்பு சட்ட திருத்த மசோதா மக்களவையில் விரைவில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கேரளா, கர்நாடகா அரசுகளைத் தொடர்ந்து, வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளது. வக்ஃபு சட்டத்திருத்த மசோதாவை கைவிடுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி நாளை தமிழ்நாடு அரசு தீர்மானம் கொண்டு வருகிறது. வக்ஃபு சட்டத் திருத்தத்துக்கு எதிரான தனித் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நாளை முதலமைச்சர் முன்மொழிகிறார்.

The post வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை தீர்மானம்! appeared first on Dinakaran.

Related Stories: