போடி, மார்ச் 25: போடி பிச்சாண்டி நடுநிலைப்பள்ளியில் பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ,தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பாக கிராமப்புற தோட்டக்கலைப் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் உலக காடுகள் தினம் கொண்டாட்ட நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் தலைமையில் நடந்தது.
இதில் 4ம் ஆண்டு வேளாண் மாணவர்கள் ஜெரால்டு எடிசன், ஜேசுதாஸ், காளிராஜ், கவிபாரதி, கார்த்திக், மணிவாசகம், மனோஜ், மெய்யநாதன், மோனிஷ், நவீன்ராஜ் மரங்கள் அழிந்து விடாமல் பாதுகாப்பது குறித்து எடுத்துரைத்தனர். மேலும் வன காடுகளின் இயற்கை யின் முக்கியதுவத்தின் அவசியம் பற்றி விழிப்புணர்வு பேரணியும் நடத்தப்பட்டது.50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் நடந்து சென்றனர்.
The post போடியில் உலக காடுகள் தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.