செம்பனார்கோயில், மார்ச் 12: செம்பனார்கோயிலில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயிலில் பூம்புகார் தொகுதி காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பானுசேகர் தலைமை வகித்தார். வட்டார தலைவர்கள் வேணுகோபால், கார்த்திகேயன், நடராஜன், ஜம்பு கென்னடி, ஹாஜி, பாலகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செம்பனார்கோயில் கிழக்கு வட்டார தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.
இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆராய்ச்சி துறை தலைவர் மணிவாசகம், காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் கனிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் வாக்குச்சாவடி முகவர்கள் தேர்தலின் போது செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேசினர். கூட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர்கள் ராமச்சந்திரன், சிவராமன், கணேசன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் தினகரன் உள்ளிட்ட திரளான கட்சியினர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர் காங்கிரஸ் வட்டாரத் தலைவர் ராஜீவ் காந்தி நன்றி கூறினார்.
