மயிலாடுதுறை-காரைக்குடி நேரடி ரயில் சேவை

மயிலாடுதுறை, மார்ச் 12: மயிலாடுதுறை- காரைக்குடி நேரடி ரயில் சேவையை திருச்சிராப்பள்ளி இருந்து காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி துவங்கி வைத்தார். மயிலாடுதுறை ரயில்வே சந்திப்பு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த சந்திப்பு மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது, மயிலாடுதுறையில் இருந்து நேரடியாக காரைக்குடி செல்வதற்கு காலை, மாலை இரு வேளையும் ரயில்கள் இயக்கப்பட்டன. பின்னர், அகல ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டபோது, மயிலாடுதுறை- காரைக்குடி நேரடி ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, அகல ரயில் பாதை பணிகள் முடிந்த பிறகு காலையில் மட்டும் காரைக்குடி நேரடி ரயில் சேவை இயக்கப்பட்டது. அந்த ரயிலும் 2024-ம் ஆண்டு நிறுத்தப்பட்டு, திருவாரூரில் இருந்து காரைக்குடி புறப்பட்டு சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நேற்று காரைக்குடி- மயிலாடுதுறை நேரடி ரயில் சேவையை காணொளிக் காட்சி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே தலைமை நிர்வாகி அதிகாரி சாலை பாதுகாப்பு ரவிக்குமார், கூடுதல் கோட்டா ரயில்வே மேலாளர் சத்தியரதன், தெற்கு ரயில்வே இயந்திர பொறியாளர் பிரபாகர், எம்எல்ஏ ராஜ்குமார், நகர மன்ற தலைவர் செல்வராஜ், மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் மலர்த்துவி அனுப்பி வைத்தனர். அதன்படி, காரைக்குடியில் காலை 6.15 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் வழியாக மயிலாடுதுறைக்கு காலை 10.40 மணிக்கு ரயில் (56836) வந்து சேரும். மயிலாடுதுறையில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு திருவாரூர் வழியாக காரைக்குடிக்கு இரவு 9.15 மணிக்கு ரயில்(56835) சென்றுசேரும். இது ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: