சீர்மரபினர் சமூகத்தினருக்கு ஒற்றை சான்றிதழ் வழங்க டிடிவி.தினகரன் வலியுறுத்தல்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தென் மாவட்டங்களில் உள்ள சீர்மரபினர் சமூகத்தினர் ஒன்றிய, மாநில அரசுகளின் திட்டங்களை பெற ஒற்றைச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டாகியும் இதுவரை அதற்கான அரசாணை பிறப்பிக்கப்படவில்லை என நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

சீர்மரபு வகுப்பினர் , சீர்மரபு பழங்குடியினர் என்ற இரட்டைச் சான்றிதழ் முறையை மாற்றி DNT என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அரசாணை இதுவரை பிறப்பிக்காமல் இருப்பதால் சீர்மரபினர் ஒன்றிய, மாநில அரசுகளின் திட்டங்களை பெறுவதில் சிக்கல் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, ஒற்றைச் சான்றிதழ் வழங்குவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

The post சீர்மரபினர் சமூகத்தினருக்கு ஒற்றை சான்றிதழ் வழங்க டிடிவி.தினகரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: