டெல்லி-பெங்களூரு விமானம் நடுவானில் பறந்தபோது எரிபொருள் தட்டுப்பாடு: சென்னையில் அவசரமாக தரையிறக்கம்

சென்னை: டெல்லி-பெங்களூரு ஏர் இந்தியா பயணிகள் விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது திடீரென எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதால், சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. டெல்லியில் இருந்து பெங்களூருக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானம், 172 பயணிகளுடன் புறப்பட்டு வந்து கொண்டு இருந்தது. இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபோது, விமானத்தில் எரிபொருள் மிகவும் குறைவாக இருப்பதை விமானி கண்டுபிடித்தார்.

இந்நிலையில், விமானம் பெங்களூரு சென்று தரை இறங்குவதில் பிரச்னை ஏற்படலாம் என்று கருதிய அவர், விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துவிட்டு அவர்களின் அறிவுரையின்படி, விமானத்தை சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வந்து அங்கு பத்திரமாக தரையிறக்கினார்.

இதைதொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பப்பட்டு மீண்டும் விமானம் பகல் 2 மணிக்கு, சென்னையில் இருந்து புறப்பட்டு, 2.50 மணிக்கு பெங்களூரை சென்றடைந்தது. இதனால் விமான பயணம் 2 மணிநேரம் தாமதமானது. இந்த விமானத்தில் பயணித்த 172 பயணிகள் அவதி அடைந்தனர்.

The post டெல்லி-பெங்களூரு விமானம் நடுவானில் பறந்தபோது எரிபொருள் தட்டுப்பாடு: சென்னையில் அவசரமாக தரையிறக்கம் appeared first on Dinakaran.

Related Stories: