ஊடகவியலாளர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றுவதற்காக பொது நிகழ்வுகளை பதிவு செய்யும் போது, அவர்களுக்கு எதிராக வன்முறையை பயன்படுத்துவது அநாகரிகமானது மட்டுமல்ல, சட்டத்திற்கு புறம்பான, கீழ்த்தரமான செயலாகும். இந்த சம்பவம், பாஜவினரின் அடாவடித்தனத்தையும், சகிப்புத்தன்மையின்மையையும் வெளிப்படுத்துகிறது.
இத்தகைய தாக்குதல்கள் ஊடக சுதந்திரத்தை அச்சுறுத்துகிறது. ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும், அவர்களது உரிமைகளையும் உறுதிப்படுத்துவது அரசின் முக்கிய பொறுப்பாகும். எனவே, இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட பாஜவினர் மீது காவல்துறை உடனடியாக சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
The post பாஜ பொதுக்கூட்டத்தில் செய்தியாளர் மீது தாக்குதலுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம் appeared first on Dinakaran.