சென்னை: பராமரிப்பு பணிகளுக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா மார்ச் 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை 11 நாள் மூடப்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரியவகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கண்டு களித்துவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில், பராமரிப்பு பணிகளுக்காக வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை 11 நாள் மூடப்படும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, பூங்கா நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், ‘வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் அவசர பழுது பார்த்தல் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காகவும், பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் சிங்கம் மற்றும் மான் சபாரி சேவை மார்ச் 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை மூடப்படும்’ என்று தெரிவித்துள்ளது.
