250 சிறப்பு மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை

சென்னை: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக 250 சிறப்பு மருத்துவர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார். சிறப்பு மருத்துவர்களை நியமிக்கும் பொருட்டு தேர்வு வாரியம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு, மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ துறையில் 182 சிறப்பு மருத்துவர் பணியிடங்களுக்கும், கதிரியக்கவியல் துறையில் 37 சிறப்பு மருத்துவர் பணியிடங்களுக்கும், தடயவியல் மருத்துவத் துறையில் 24 சிறப்பு மருத்துவர் பணியிடங்களுக்கும், முதியோர் மருத்துவ துறையில் 6 சிறப்பு மருத்துவர் பணியிடங்களுக்கும், இதய அறுவை சிகிச்சை துறையில் ஒரு சிறப்பு மருத்துவர் பணியிடத்திற்கும் என மொத்தம் 250 சிறப்பு மருத்துவர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Related Stories: