சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக, தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, ஒடிசா, பஞ்சாப் ஆகிய ஏழு மாநிலங்கள் கூட்டாட்சி முறையைப் பாதுகாக்கவும், நியாயமான தொகுதி மறுசீரமைப்பு செயல்முறையைக் கோரியும் ஒன்றிணைந்துள்ளன. சென்னையில் நேற்று நடந்த முதல் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடந்தது. இந்த முக்கியமான நிகழ்வு சமமான பிரதிநிதித்துவத்திற்கான போராட்டத்தில் குறிப்பிடத்தகுந்த தருணம் ஆகும்.
ஏனெனில், நாடாளுமன்றத்தில் தங்களின் குரலை பலவீனப்படுத்தும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிராகப் பல மாநிலங்கள் ஒன்றுபட்டுள்ளன. மார்ச் 5ம் தேதி தமிழகத்தில் 58 அரசியல் கட்சிகள் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விவாதிக்க, பல மாநில முதல்வர்களையும், அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் ஒருங்கிணைத்துள்ளார். இதன் மூலம் இந்த முக்கியமான பிரச்னையை குறித்து ஒன்றிய அளவில் ஒருமித்த கருத்தை மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ளார்.
இந்த கூட்டத்தில் பாதிக்கப்பட்ட ஆறு மாநிலங்களிலிருந்து 14 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருங்கிணைந்த கூட்டத்தில் பங்கேற்ற முக்கியமானவர் கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்.
மக்கள்தொகை வளர்ச்சியை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தில், ஏற்படுத்தும் பாதகத்தை கூட்டு நடவடிக்கைக் குழு விவாதித்தது. அனைத்து மாநிலங்களும் நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்ய வேண்டும், நாட்டின் கூட்டாட்சி முறையைப் பாதுகாக்க வேண்டும். வெளிப்படையான, சமத்துவமான அணுகுமுறையைக் கைகொள்ள வேண்டும் என கூட்டு நடவடிக்கைக் குழு வலியுறுத்தியது.
இந்த முக்கியமான அம்சங்களையும் விவாதங்களையும் கவனத்தில் கொண்டு, கூட்டு நடவடிக்கைக் குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தின் மூலம் மு.க.ஸ்டாலினின் அரசியல் தலைமைப் பண்பு ஒன்றிய அரசியலில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கூட்டாட்சி அரசியலை ஒன்றிய அரசியலில் முக்கியமான பேசுபொருள் ஆக்கியுள்ளது. நியாயமான, வெளிப்படையான தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை உறுதி செய்வதற்காக ஒன்றிணைந்த நடவடிக்கையின் தொடக்கத்தை கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் குறிக்கிறது.
வரவிருக்கும் நாட்களில், கூட்டு நடவடிக்கைக் குழு அரசியல் கட்சிகள், மக்கள் அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோரிடையே ஒருமித்த கருத்தை உருவாக்கவும், சமமான பிரதிநிதித்துவ கோரிக்கையை வலுப்படுத்தவும் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இந்த தொடக்கம் தொகுதி மறுசீரமைப்பு பிரச்னையோடு முடிந்துவிடாது – இந்தியாவின் கூட்டாட்சி முறையை வலுப்படுத்தி, நாட்டின் ஜனநாயக கட்டமைப்பில் ஒவ்வொரு மாநிலத்தின் குரல் வலுவாக ஒலிக்க தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும்.
The post மு.க.ஸ்டாலினின் அரசியல் தலைமை பண்பு ஒன்றிய அரசியலில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது: தீர்மானங்கள் டெல்லியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது appeared first on Dinakaran.