மஞ்சுவிரட்டில் காளை முட்டி 3 பேர் சாவு

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே குன்றக்குடி ஆதினத்திற்கு உட்பட்ட அரவன் கிரி என்னும் அரளிப்பாறை பாலதண்டாயுதபாணி கோயிலில் மாசித்திருவிழாவையொட்டி நேற்று மஞ்சுவிரட்டு நடந்தது. இதை பெண்கள், குழந்தைகள் என ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் மலைமீதுள்ள பாறையில் அமர்ந்தும், டிராக்டர், வேன், கார் உள்ளிட்டவற்றில் அமர்ந்தும் கண்டு ரசித்தனர்.

மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள், கட்டுமாடுகளாக வயல்வெளிகள், சாலை ஓரங்களில் அவிழ்த்து விடப்பட்டன. இதில் காளைகள் முட்டியதில் புதுக்கோட்டை மாவட்டம், அரப்பன்வயல் சுந்தர்ராஜன் (34), மதுரை மாவட்டம் நாட்டார்மங்கலம் ராமநாதன்(24), மேலூரில் தங்கி ஐஸ் வியாபாரம் செய்து வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜமால் லால் (55) ஆகியோர் காளைகள் முட்டி உயிரிழந்தனர்.

Related Stories: