இதேபோன்று, விழுப்புரம் போக்குவரத்து கழகத்தில் விழுப்புரம் 88, வேலூர் 50, காஞ்சிபுரம் 106, கடலூர் 41, திருவண்ணாமலை 37 என மொத்தம் 322 பேரும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 318 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். கல்வி தகுதியை பொறுத்தவரை பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் எழுத, பேச, படிக்க தெரிந்திருக்க வேண்டும். 2025ம் ஆண்டு ஜூலை 1ம் தேதிப்படி 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
செல்லத்தக்க கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் குறைந்தபட்சம் 18 மாதங்கள் கனரக வாகனம் ஓட்டிய அனுபவம், முதலுதவிச் சான்று, பொதுப் பணி வில்லை மற்றும் செல்லத்தக்க நடத்துநர் உரிமம் 2025 ஜன.1ம் தேதிக்கு முன்னர் பெற்றதாக இருத்தல் வேண்டும். இப்பணியிடங்களுக்கு இன்று பிற்பகல் 1 மணி முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் www.arasubus.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post அரசு போக்குவரத்து கழகங்களில் இன்று முதல் 3,274 ஓட்டுநர், நடத்துநர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.