இஸ்லாமாபாத்: பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு உலக அளவில் இந்தியா படுகொலை நடத்தி வருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஷப்கத் அலி கான் கூறியதாவது: இந்தியா தங்கள் நாட்டிலிருந்து உலகளாவிய படுகொலையை நடத்தி வருகிறது. இதில் இந்தியாவின் தலையீடு தெளிவாக உள்ளது. அவர்கள் பாகிஸ்தானில் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டாவதாக பாகிஸ்தான் மட்டுமல்ல, அவர்கள் ஒட்டுமொத்த பிராந்தியத்தையும், அனைத்து தெற்காசிய நாடுகளையும் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். பாகிஸ்தானில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதில் இந்தியா தீவிரவாமாக உள்ளது. பலுசிஸ்தானை ஸ்திரமின்மைக்கு உள்ளாக்குவதில் இந்தியாவின் செயல்பாடுகளுக்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. பயணிகளுடன் கடத்தப்பட்ட ஜாபர் எக்ஸ்பிரஸ் மீதான தாக்குதலை இந்தியா ஒருபோதும் கண்டிக்கவில்லை. இவ்வாறு தெரிவித்தார்.
The post பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு உலக அளவில் இந்தியா படுகொலை நடத்துகிறது: பாகிஸ்தான் சொல்கிறது appeared first on Dinakaran.