கூடலூர், மார்ச் 14: தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் கூடலூரில் ஏஐடியூசி அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் நாகராஜ் பாண்டியன் தலைமை வகித்தார். கௌரவ தலைவர் முகமது கனி, குணசேகரன், மாவட்ட அமைப்பாளர் புட்ராஜ், துணை செயலாளர் மணிகண்டன், பொருளாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடந்த இரண்டு மாதங்களாக முடக்கப்பட்டுள்ள நிலையில், இப்பிரச்சனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வருவாய் கோட்டாட்சியர், நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு முறைப்படி மனுக்கள் அளிக்கப்பட்டும் இதுவரை முன்னேற்றம் எதுவும் ஏற்படாததால் அனைத்து சாலை ஓர வியாபாரிகளின் வாழ்வதாரத்தை கருத்தில் கொண்டு, அவர்களின் பிரச்னைக்கு தீர்வு காணவும், அரசு அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரியும் சாலையோர வியாபாரிகள் வரும் 20-ம் தேதி காலை 10 மணி முதல் நகராட்சி முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
The post சாலையோர வியாபாரிகளுக்கு இடம் வழங்க கோரிக்கை appeared first on Dinakaran.