ஹோண்டுராஸ் கடலில் விழுந்து நொறுங்கிய விமானம்: 12 பேர் உயிரிழப்பு; 5 பேர் உயிருடன் மீட்பு!

ஹோண்டுராஸ்: ஹோண்டுராஸ் நாட்டில் சிறிய ரக வர்த்தக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில் பிரபல இசையமைப்பாளர் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். மத்திய அமெரிக்காவின் ஹோண்டுராஸ் நாட்டில் ரோவாடன் தீவில் இருந்து லான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் சிறிய ரக வர்த்தக விமானம் ஒன்று 17 பயணிகளுடன் கடந்த திங்கட்கிழமை இரவு புறப்பட்டது. அந்த விமானம் லா சீபா நகர் நோக்கி சென்று கொண்டிருந்த சிறிது நேரத்திலேயே கடலில் விழுந்தது. அதில் 17 பயணிகள் மேற்றும் பாண்டியர்கள் இருந்தனர். இதனை பார்த்த மீனவர்கள் சிலர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 5 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 12 பேர் உயிரிழந்தனர்.

விமானம் முழு உயரத்திற்கு செல்ல முடியாமல், விபத்தில் சிக்கி கடலுக்குள் மூழ்கியது என போலீசார் தெரிவித்தனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக ஹோண்டுரான் சிவில் ஏரோநாட்டிக்ஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு சான் பெட்ரோ சுலா பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த விபத்தில் பிரபல இசையமைப்பாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்றவாதியான ஆரெலியோ மார்டினெஜ் சுவாஜோவும் பலியானார். கரிபுனா மற்றும் மிஸ்கிடோ மொழிகளில் திறமை வாய்ந்த அவர் அவை இரண்டிலும் இசையமைக்கும் திறன் பெற்றவராக இருந்துள்ளார். அவருடைய இசை ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளிலும் பிரபலம் அடைந்துள்ளது.

The post ஹோண்டுராஸ் கடலில் விழுந்து நொறுங்கிய விமானம்: 12 பேர் உயிரிழப்பு; 5 பேர் உயிருடன் மீட்பு! appeared first on Dinakaran.

Related Stories: