கோவை: கருமத்தம்பட்டியில் வீட்டின் வெளியே உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்தான். காணாமல் போன சிறுவனை தேடிய போது வீட்டின் தண்ணீர் தொட்டியில் இறந்து மிதந்ததை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் வெளியே உள்ள தண்ணீர் தொட்டியை சரியாக மூடாததால் சிறுவன் சிரஞ்சீவி விக்ரம்(2) பலியானான்.