சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கு புறப்பட்ட தமிழிசை கைது..!!

சென்னை: சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கு புறப்பட்டபோது தமிழிசை சௌந்தரராஜன் கைது செய்யப்பட்டார். பாஜகவின் சார்பில் சென்னை எழும்பூரில் அமைந்துள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடுவதற்கு இன்று பாஜக சார்பில் 2000க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர்.

குறிப்பாக அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன், வினோத் டி செல்வம் உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் பங்கேற்க கூடிய நிலையில் இன்று இருவரும் வீட்டுக்காவலில் கைது செய்யக்கூடிய வகையில் காவல்துறை குவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் சாலிகிராமத்தில் இருக்கக்கூடிய முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், அவர் அருகில் உள்ள தனியார் மண்டபத்திற்கு கொண்டு செல்ல காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முன் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருப்பதாக நேற்றைய தினத்திலிருந்தே பாஜவின் மாவட்ட தலைவர்கள் மாநில நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்க கூடிய நிலையில் ஒரு சிலரை தற்போது கைது செய்யக்கூடிய பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

The post சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கு புறப்பட்ட தமிழிசை கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: