சென்னை: பள்ளி பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குவது பற்றிய வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஐகோர்ட் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஒத்திவைத்தார்.