நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் ஒன்றிய அரசு தொகுதிகளை குறைத்து தமிழகத்தை வஞ்சிக்க நினைக்கிறது. அதை ஒரு போதும் தேமுதிக ஏற்காது. இதுதொடர்பாக தமிழக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு தேமுதிக முழு ஆதரவு அளிக்கும். தேமுதிக தலைவர் விஜயகாந்த் அன்னை தமிழை காப்போம், அனைத்து மொழியும் கற்போம் என்ற கொள்கையை வலியுறுத்தினார். அதையே நாங்களும் வலியுறுத்துகிறோம். தமிழக பட்ஜெட் குறித்து முழுமையாக படித்து அறிக்கை வெளியிடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post எம்பி தொகுதி சீரமைப்பை ஏற்கமாட்டோம் தமிழக அரசு எடுக்கும் முயற்சிக்கு முழு ஆதரவு: பிரேமலதா உறுதி appeared first on Dinakaran.