இதனையடுத்து கடலூரில் இருந்து வரவழைக்கப்பட்ட கைரேகை மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ஒவ்வொரு பகுதியாக சோதனை செய்தனர். இறுதியாக என்எல்சி தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என தெரியவந்தது. மேலும் நிர்வாக அலுவலகம், பீல்ட் ஆபீஸ், அனல் மின் நிலையம் போன்ற இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர். இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என தெரியவந்தது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் யார்? என போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
The post என்எல்சி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.