சென்னை அரசு பஸ்சில் ரூ.25 லட்சம் ஹவாலா பணம்: வாலிபரிடம் போலீஸ் விசாரணை

கடலூர்: கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமாரின் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் நேற்று கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து கடலூர் நோக்கி வந்த ஒரு அரசு பேருந்தை நிறுத்தி அதில் இருந்த பயணிகளிடம் சோதனை நடத்தினர்.

அதில் வந்த தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியைச் சேர்ந்த முகதூம் மகன் அகமது லிபாய் (23) என்ற வாலிபரின் பையில் ரூ.25 லட்சம் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து போலீசார் அந்த ஹவாலா பணம் குறித்து அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமான வரி துறையிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.

 

The post சென்னை அரசு பஸ்சில் ரூ.25 லட்சம் ஹவாலா பணம்: வாலிபரிடம் போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: