தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், சென்னை ஆகிய மண்டலங்களில் தேர்வு செய்யப்பட்ட முதியோர் பக்தர்கள் கலந்துகொள்ளும் ராமேஸ்வரம் காசி யாத்திரை ஆன்மீகப் பயணம் நேற்று முதல் தொடங்கி வரும் 19ம்தேதி வரை நடைபெறுகிறது. ஆன்மீக பயணத்திற்காக காஞ்சிபுரம் மண்டலத்தில் தேர்வு செய்யப்பட்ட 20 முதியோர் பக்தர்கள் காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயிலில் இருந்து ராமேஸ்வரம் காசி யாத்திரை ஆன்மீக பயணம் மேற்கொள்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை பணியாளர்கள் பாதுகாப்புடன் ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் குமர துரை கலந்துகொண்டு, ஆன்மீகப் பயண வாகனத்தை கொடியசைத்து வைத்து, பக்தர்களை வழிய அனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் குமரகோட்டம் முருகன் கோயில் செயல் அலுவலர் கேசவன், இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள், முதியோர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post காஞ்சிபுரம் மண்டலத்தில் தேர்வான 20 முதியோர்கள் காசி யாத்திரை appeared first on Dinakaran.
