காஞ்சிபுரம்,டிச.30: காஞ்சிபுரம் மாநகராட்சியின் கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டம் நேற்று மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட 21 வது வார்டு பாஜ பெண் கவுன்சிலர் சுஜிதா அருண்பாண்டியன், தனது வார்டு பகுதியில் செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்தும், மாநகராட்சி பகுதியில் செய்யப்பட்டுள்ள பணிகளின் விபரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினார். மாநகராட்சியில் எந்தவித பணிகளும் செய்யப்படவில்லை என கூறினார். இதனால் திமுக கவுன்சிலர்களுக்கும் பாஜ கவுன்சிலர் சுஜிதா அருண் பாண்டியனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாஜ கவுன்சிலர் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தார். பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு பணிகளுக்கும், செலவினங்களுக்கும் ஒப்புதல் அளித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநகராட்சி கூட்டத்தில் துணை மேயர் குமரகுருநாதன், மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன், மண்டல குழு தலைவர்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மாமன்ற கூட்டத்தில் பாஜ பெண் கவுன்சிலர் வாக்குவாதம்
- பாஜக
- காஞ்சிபுரம்
- மாநகர
- சபை
- காஞ்சிபுரம் மாநகராட்சி
- மாநகராட்சி
- மேயர்
- மஹாலக்ஷ்மி யுவராஜ்
- 21வது வார்டு
- சுஜிதா அருண்பாண்டியன்
