என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குசாவடி பரப்புரை கூட்டம்: சுந்தர் எம்எல்ஏ ஆலோசனை வழங்கினார்

மதுராந்தகம், டிச.27: என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குசாவடி பரப்புரை கூட்டத்தில் சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் லத்தூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரைக் கூட்டம் மற்றும் பாக முகவர்கள், நிலை குழு உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் பெரும்பாக்கம் ஊராட்சி மடையம்பாக்கம் கிராமத்தில் நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.பாபு தலைமை தாங்கினார். மாநில இலக்கிய அணி துணை செயலாளர் தசரதன் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் வரவேற்றார். இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு 2026 சட்டமன்ற தேர்தலில் பாக முகவர்கள், நிலை குழு உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்காளர்களை அணுகும் முறைகள், வாக்குகள் சேகரிக்கும் முறைகள், குறைந்த வாக்குகள் பெற்ற இடங்களில் அதிக வாக்குகள் பெற மேற்கொள்ள வேண்டியவை, அதிக வாக்குகள் பெற்ற இடங்களில் இன்னும் அதிகமாக வாக்குகள் பெறுவது குறித்து பல்வேறு, புதிய வாக்காளர்கள் சேர்ப்பது குறித்து திராவிட மாநில அரசின் சாதனைகளையும் பட்டியலிட்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். அதனைத்தொடர்ந்து, இரணையசித்தி கிராமத்தில் நடந்த என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார். இந்த கூட்டங்களில் நிர்வாகிகள் மணி, அர்ஜுனன், வெங்கடேசன், பன்னீர்செல்வம், பாபு ஆசிரியர், கதிரவன், சுந்தரி ஜனார்த்தனன், குமார், சீதாலட்சுமி, ஜெயக்குமார், இளைஞர் அணி நிர்வாகிகள் தமிழ்மாறன், அருள்மொழி வர்மன் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: