ஈரோடு: ஈரோட்டில் கூலி தொழிலாளியின் ஆவணங்களை பயன்படுத்தி கோடிக்கணக்கில் ஜிஎஸ்டி மோசடி செய்துள்ளனர். ரூ.5 கோடி ஜிஎஸ்டி வரி செலுத்துமாறு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியதால் அதிர்ச்சியடைந்த கூலித் தொழிலாளி நல்லசாமி போலீசில் புகார் அளித்துள்ளார். கூலித் தொழிலாளியின் பெயர், முகவரி மற்றும் ஆவணங்களை பயன்படுத்தி மோசடி நடந்தது தெரியவந்துள்ளது.