அதே ஊரைச்சேர்ந்த பெரியான் மகன் விஷால்(21). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு விவசாய வேலைகளுக்காக வெளியே சென்றனர். பின்னர் வேலைகளை முடித்துக்கொண்டு, டிராக்டரில் மதுரை – திருச்சி நான்கு வழிச்சாலையில் சொந்த ஊர் நொக்கி வந்து கொண்டு இருந்தனர்.
டிராக்டரை காந்தி ஓட்டிய நிலையில், விஷால் உடனிருந்தார். அவர்களின் டிராக்டர் மணப்பெட்டி இந்திரா காலனி என்னும் இடத்தில் வந்த போது திருச்சியில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ் எதிர்பாராத விதமாக டிராக்டரின் பின்னால் மோதியது.
இதில் விஷால் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தார். அதே நேரம் டிராக்டர் சாலையின் தடுப்பு சுவரில் மோதி, கீழே விழுந்த விஷால் மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலே அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார். காந்தி சிறுகாயங்களுடன் தப்பினார்.
* இதேபோல் நேற்று காலை திருச்சி பாலக்கரையில் இருந்து மதுரை பாண்டி கோவிலில் நடைபெற்ற விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக 9 பேர் ஒரு வேனில் புறப்பட்டு வந்துகொண்டு இருந்தனர். அவர்களது வேன் கருங்காலக்குடி அருகே நான்கு வழிச்சாலையில் வந்த போது வேனின் பின்பக்கம் இருந்த டயர்களில் ஒன்று திடீரென வெடித்தது.
இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன், இரண்டு முறை உருண்டு, சென்டர் மிடியனில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த டிரைவர் உள்ளிட்ட 10 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் கருங்காலக்குடி, மேலூர் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். இவர்களில் சிலர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்விரு விபத்துகள் குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post கொட்டாம்பட்டி அருகே இருவேறு விபத்துகளில் சிக்கி ஒருவர் பலி; 10 பேர் காயம் appeared first on Dinakaran.
