5 சவரன் வரை கூட்டுறவு வங்கிகளில் கடன் வைத்திருந்தவர்களுக்கு தள்ளுபடி செய்ததில் பெண்கள் பலர் பயன்பெற்றனர். மகப்பேறு விடுப்பு காலம், தற்போது 12 மாதங்களாக உயர்த்தப்பட்டு உள்ளது. மகளிர் சுய உதவிக்குழு கடன் உச்சவரம்பு, ரூ.12 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயர்த்தி உள்ளோம். நாட்டிலேயே அதிக பொருளாதார சுதந்திரம் பெற்ற பெண்களில், தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. இதுவெல்லாம் தெரிந்தும் தெரியாதது போல சிலர் விமர்சிக்கின்றனர்.
பெண்கள் பாதுகாப்பு விசயத்தில் அரசு எந்த சமரசமும் செய்வதில்லை. சமூக நலத்துறை, காவல்துறை இதில் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. பாதிக்கப்பட்டவரை புகார் கொடுக்க முன்வர செய்வது, வழக்கு பதிவு செய்வது, அந்த வழக்கை வேகப்படுத்துவது என செயல்திட்டம் தொடர்பாக முதலமைச்சர் எங்களுக்கு உத்தரவிட்டு உள்ளார். மேலும் அரசு துறைகள் சார்பில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.
அங்கு ஒன்று, இங்கு ஒன்று என குழந்தைகளுக்கான எதிராக நடக்கும் சில குற்றச்செயல்கள் கூட, வெளியே வராத நிலை இருந்தது. இதுதொடர்பான விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தியதன் காரணமாக, புகாரும், அந்த புகாரின் மீதான உடனடி நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் எப்ஐஆர் போடவே போராட வேண்டியிருந்தது.
அரசின் திட்டங்களை தவெக தலைவர் விஜய் தெரிந்து கொள்ள வேண்டும். பெண்களிடம் பேசி, அவர் தெரிந்துகொள்ள வேண்டும். பாஜவின் நோக்கத்தை நிறைவேற்ற அதிமுகவும், தவெகவும் செயல்படுகிறார்கள். அவர்களுக்கு ஏற்றார்போல் அறிக்கை வெளியிடுகிறார்கள். அதிமுக, தவெக ஆகிய கட்சிகளின் உள்நோக்கம் என்ன என்பது விரைவில் வெளிவரும். இவ்வாறு அவர் பேசினார்
The post பாஜவின் நோக்கத்தை நிறைவேற்றவே செயல்படுகின்றன அதிமுக, தவெக கட்சிகளின் உள்நோக்கம் விரைவில் வெளிவரும்: அமைச்சர் கீதாஜீவன் பேட்டி appeared first on Dinakaran.
