மீனவர்கள் 18 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றக் காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் காவல் நேற்று நிறைவடைந்ததை தொடர்ந்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 17 மீனவர்களுக்கும் இந்திய மதிப்பில் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் அபராதம், ஒரு மீனவர் மட்டும் 2வது முறையாக சிறைப்பட்டிருந்ததால் அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதில் 17 மீனவர்கள் அபராத தொகை கட்டிய பின் விடுதலை செய்யப்படுவார்கள் என யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
The post 17 மீனவர்களுக்கு ரூ.12.50 லட்சம் அபராதம்: ஒருவருக்கு சிறை appeared first on Dinakaran.
