தொடர்ந்து தென்ஆப்பிரிக்கா அணி சேசிங் செய்த போது, சிறப்பாக பந்துவீசி தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியது. குறிப்பாக அந்த போட்டியில் சான்ட்னர் அபாரமாக பந்துவீசி நியூசிலாந்தை பைனலுக்கு அழைத்துச் சென்றார். எனவே இந்தியாவுக்கு எதிரான இறுதி போட்டியிலும் அதே பாணியை கடைபிடிக்க நியூசிலாந்து அணி தீர்மானித்துள்ளது. ஆனால் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தால், நியூசிலாந்து அணி சேசிங் செய்வது மிகவும் சிரமமாக இருக்கும். இந்திய அணியின் ஜடேஜா, வருண், குல்தீப், அக்சர் ஆகியோரது சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மீண்டும் சொதப்ப வாய்ப்புள்ளது. குறிப்பாக அன்ஆர்த்தோடெக்ஸ் முறையில் பந்து வீசும் வருண் சக்கரவர்த்தியை சமாளிப்பது அந்த அணிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கும். எனவே அதை தவிர்ப்பதற்காக நியூசிலாந்து அணி டாஸ் வென்றால் நிச்சயமாக பேட்டிங் தான் தேர்வு செய்யும் என மைக் ஹெசன் தெரிவித்துள்ளார்.
The post டாஸ் வென்றால் பேட்டிங் தான்: நியூசி. மாஜி கோச் பேட்டி appeared first on Dinakaran.
