கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து சனத் ஜெயசூர்யா விலகிய நிலையில் கிறிஸ்டனை புதிய பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளின் பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார் கேரி கிறிஸ்டன். அவரது பயிற்சியின் கீழ் 2011-ல் இந்தியா உலகக் கோப்பை பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
வரும் 2027-ல் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறுகிறது. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு அவர் பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் ஒப்பந்தம் செய்துள்ளது. அவர் வரும் ஏப்.15 முதல் இலங்கை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கிறார்.
