இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் பாலினி, அனிசிமோவா வெற்றி

 

இண்டியன்வெல்ஸ், மார்ச் 11 : அமெரிக்காவில் நடைபெறும் இண்டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி, அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினர்.நேற்று நடந்த மகளிர் பிரிவு 3வது சுற்றில், தரவரிசையில் 7ம் இடத்தில் உள்ள பாலினி 7-5, 5-7, 6-1 என்ற செட்களில், ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிச்சை வீழ்த்தினார். 6ம் இடத்தில் உள்ள அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா 6-1, 6-1 என்ற நேர் செட்களில் எளிதாக இங்கிலாந்தின் எம்மா ரடுகானுவை தோற்கடித்தார்.

இதையடுத்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில், அனிசமோவா – கனடாவின் விக்டோரியா போகோவையும், பாலினி – ஆஸ்திரேலியாவின் டாலியா கிப்சனையும் சந்திக்கின்றனர். காயத்தால் விலகல் :உலகின் 4ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ கவுப், 2-6, 0-2 என, பிலிப்பைன்ஸின் இளம் வீராங்கனை அலெக்ஸாண்ட்ரா எலாவிடம் பின்தங்கியிருந்தார். அப்போது, காயம் ஏற்பட்டதால் போட்டியிலிருந்து விலகினார்.

இண்டியன் வெல்ஸ் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில், உலகின் 2ம் நிலை வீரரான இத்தாலியின் யானிக் சின்னா் 6-3, 6-2 என்ற நேர் செட்களில், கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை வீழ்த்தினார். அடுத்து அவர் பிரேசிலின் ஜாவ் ஃபொன்சேகாவை எதிர்கொள்கிறார்.9வது இடத்திலிருக்கும் கனடாவின் ஃபெலிக்ஸ் அலியாசிமே 6-7 (5/7), 6-3, 6-3 என்ற செட்களில், கனடாவின் கேப்ரியல் டியாலோவை தோற்கடித்தார்.

அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-7 (3/7), 6-4, 3-6 என்ற செட்களில், சக அமெரிக்கரான டியெனிடம் தோல்வியடைந்தார். பாம்ப்ரி இணை வெற்றி : ஆடவர் இரட்டையா் பிரிவில், இந்தியாவின் யூகி பாம்ப்ரி / ஸ்வீடனின் ஆண்ட்ரே கொரான்சன் கூட்டணி 6-1, 6-3 என்ற செட்களில் நெதர்லாந்தின் டேவிட் பெல்/பிரான்ஸின் ஃபேப்ரைஸ் மாா்டின் இணையை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறியது.

Related Stories: