போருக்கு இடையே போட்டியா? ஆப்கன் தொடரை ரத்து செய்த இலங்கை

 

கொழும்பு: போர் பதற்றம் காரணமாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி 20, ஒருநாள் தொடரை இலங்கை கிரிக்கெட் வாரியம் ரத்து செய்துள்ளது. இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையே முதல் இருதரப்பு கிரிக்கெட் தொடராக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் வரும் 13, 15, 17 ஆகிய தேதிகளில் டி20 தொடரிலும், துபாயில் 20, 22, 25 ஆகிய தேதிகளில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாட இருந்தது. இந்த தொடரை ஆப்கானிஸ்தான் நடத்த இருந்தது.

இந்நிலையில் கடந்த 28-ம் தேதி முதல் அமெரிக்கா – இஸ்ரேல் படைகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானும் பதில் தாக்குதலாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மற்றும் இஸ்ரேலை தாக்கி வருகிறது. போர் தீவிரமடைந்து வரும் நிலையில், வளைகுடா பயணம் உகந்ததாக இருக்காது எனக்கருதி இந்த கிரிக்கெட் தொடரை இலங்கை அணி ரத்து செய்துள்ளது.

Related Stories: