வங்கதேசத்திடம் பாக். சரண்டர்

 

மிர்பூர்: வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, மிர்பூரில் முதல் ஒரு நாள் போட்டியில் ஆடியது. முதலில் ஆடிய பாக். அணியின் துவக்க வீரர்கள் ஷாகிப்ஸதா ஃபர்கான் 27, மாஸ் சதாகத் 18 ரன் எடுத்து அவுட்டாகினர்.

பின் வந்தோர் சொற்ப ரன்களில் வீழ்ந்ததால் 114 ரன்னுக்கு அந்த அணி சுருண்டது. பின்னர் 115 ரன் இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணியின் துவக்க வீரர் தன்ஸித் ஹசன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 42 பந்துகளில் 67 ரன் விளாசினார். அதனால், 15.1 ஓவரில் 2 விக் மட்டுமே இழந்து, வங்கதேசம் 115 ரன் எடுத்து 8 விக் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Related Stories: