ஓட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை பேரணாம்பட்டு அருகே உறவினர் பெண் கர்ப்பம்

பேரணாம்பட்டு, மார்ச் 5: பேரணாம்பட்டு அருகே ஓட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த கமலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி(50). ஓட்டல் நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் ரவிக்கும், அவரது உறவினர் பெண்ணுக்கும் பழக்கும் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கி பழகியதால், அந்த பெண் தற்போது 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரிய வந்தநிலையில், அவரது குடும்பத்தினர் ரவியின் குடும்பத்தினரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த ரவி தன்னுடைய நிலத்திற்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பேரணாம்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில், விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஓட்டல் உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை பேரணாம்பட்டு அருகே உறவினர் பெண் கர்ப்பம் appeared first on Dinakaran.

Related Stories: