சென்னை: சீமான் வீட்டு காவலாளி அமல்ராஜிடம் இருந்து துப்பாக்கி, 20 தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சீருடை அணிந்திருந்த காவல் அதிகாரியின் சட்டையை பிடித்து சீமான் உதவியாளர் தாக்கினார். போலீசாரை தாக்கிய நாதக நிர்வாகிகள் அமல்ராஜ், நெல்லை சுபாகர் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.