சென்னை: மெரினா பாரம்பரிய வழித்தட திட்டப்பணிகள் சென்னை மெரினா கடற்கரை பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கடற்கரையை ரசிப்பதற்கான பார்வையாளர் தளம், நவீன பேருந்து நிறுத்தம், சைக்கிள்களுக்கான தனி பாதை அமைக்கப்படுகிறது. நடைபயிற்சி செல்பவர்களுக்கான நடைபாதை அமைக்கும் பணி சிஎம்டிஏ சார்பில் நடைபெற்று வருகிறது.
