ஊட்டி, பிப். 27: ஊட்டியில் உள்ள உருது பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு எம்பி., ராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட காந்தள் காந்தி நகரில் உருது பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ளது. அதற்போது மேல் உருது படிக்க வேண்டும் என்றால், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் வேலூர் மாவட்டத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், பெரும்பாலான மாணவர்கள் தங்களது கல்வியை நிறுத்திக் கொள்கின்றனர். சிலர் மாற்று பாடங்களை தேர்வு செய்ய வேண்டியுள்ளது.
இந்நிலையில், காந்தள் பகுதியில் இயங்கி வரும் உருது பள்ளியை தரம் உயர்த்தி தர வேண்டும் என அப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் பலரும் நீலகிரி எம்பி., ராசாவிடம் நேரில் தொடர்பு கொண்டு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, உடனடியாக ராசா, தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு. ஊட்டி காந்தள் பகுதியில் உள்ள உருது பள்ளியின் தரம் உயர்த்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதற்கு, கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த பள்ளியின் தரம் உயர்த்தப்படும் எனத் தெரிவித்தார்.
ஊட்டி உருது பள்ளியின் தரம் உயர்த்த உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட ராசாவிற்கு உருது படிக்கும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நீலகிரி எம்பி ராசாவிற்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
The post ஊட்டி உருது பள்ளியை தரம் உயர்த்த கல்வித்துறை அமைச்சருக்கு நீலகிரி எம்பி ஆ.ராசா வேண்டுகோள் appeared first on Dinakaran.
