தொழில்முனைவோர், சிறு மற்றும் நடுத்தர வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவுநர்களுக்கு, சாட் ஜிபிடியை பயன்படுத்தி வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும், திறன் மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் உதவும் தகவல்கள் மற்றும் நடைமுறை பயிற்சிகளை பயிற்சி வகுப்பு வழங்கும். பயிற்சியில் இடம்பெறும் தலைப்புகள்: சாட் ஜிபிடி அறிமுகம் மற்றும் ப்ராம்ப்ட் நுணுக்கங்கள், சாட் ஜிபிடியின் திறன்கள் மற்றும் வணிக தேவைகளுக்கேற்ப பொருத்தமான ப்ராம்ப்ட்டுகளை எழுதும் திறன்களை கற்றுக்கொள்ளுங்கள்.
மார்க்கெட்டிங் மற்றும் பிராண்டிங் யுக்திகள், சாட் ஜிபிடியை பயன்படுத்தி புதுமையான மார்க்கெட்டிங் மற்றும் சமூக ஊடக திட்டமிடல் உத்திகளை கற்றுக்கொள்ளுங்கள். இந்த பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை 8072 799 983 / 90806 09808 தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
The post தொழில்முனைவோருக்கு ஒருநாள் சாட் ஜிபிடி பயிற்சி: மேம்பாடு நிறுவனம் தகவல் appeared first on Dinakaran.
