ஒன்றிய அரசு கல்வி நிதியை வழங்க மறுப்பு சேமிப்பிலிருந்து கல்வித் துறைக்கு ரூ.5,000 வழங்கிய 5ம் வகுப்பு மாணவி: வீடியோ பதிவிட்டு துணை முதல்வருக்கு அனுப்பி வைத்தார்

சென்னை: ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு விடுவிக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்காததை கருத்தில் கொண்டு கன்னியாகுமரியை சேர்ந்த 5ம் வகுப்பு சிறுமி ஜாக்லின் ரோஸ், தனது சேமிப்பிலிருந்து தமிழ்நாடு கல்வித் துறைக்கு ரூ.5,000 வழங்குவதாக கூறி வீடியோ பதிவிட்டு துணை முதல்வருக்கு அனுப்பி வைத்துள்ளார். குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5ம் வகுப்பு பயிலும் சிறுமி ஜாக்லின் ரோஸ் என்பவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஒரு வீடியோ பதிவை அனுப்பியுள்ளார். அந்த வீடியோவில் சிறுமி ஜாக்லின் ரோஸ் இந்தித் திணிப்பை எதிர்த்து கருத்துகள் கூறுவதாக அமைந்திருக்கிறது.

அதில் “அநாதை மொழியான இந்தி மொழி, எம் ஆதி மொழியான தமிழ் மொழியை ஆள நினைக்கலாமா? இந்தி மொழியை என்றும் எதிர்ப்போம், தமிழுக்கு அமுதென்று பேர், அந்தத் தமிழ், இன்பத் தமிழ், எங்கள் உயிருக்கு நேர். தமிழே அறம், தமிழே உயிர். ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை வழங்கவில்லை என்றால் என்ன? இதோ நான் எனது சிறு சேமிப்பிலிருந்து ரூ.5,000ஐ தமிழ்நாட்டு கல்வித்துறைக்கு மகிழ்வோடு வழங்குகிறேன்..தமிழ் வாழ்க” என்று பதிவிடப்பட்ட வீடியோவை துணை முதல்வருக்கு அனுப்பியுள்ளார்.

 

The post ஒன்றிய அரசு கல்வி நிதியை வழங்க மறுப்பு சேமிப்பிலிருந்து கல்வித் துறைக்கு ரூ.5,000 வழங்கிய 5ம் வகுப்பு மாணவி: வீடியோ பதிவிட்டு துணை முதல்வருக்கு அனுப்பி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: