இந்தப் பகுதியில் பட்டியலின மக்களும் அதிகளவில் வசித்து வரும் நிலையில், அவர்கள் கோயிலுக்குள் செல்ல இதுவரை அனுமதி வழங்கப்படுவதில்லை. இக்கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் 3 நாள் திருவிழா நடைபெறும். விழாவின் இறுதி நாளில் பாரிவேட்டை நிகழ்ச்சியில் பழங்கள் சூறைவிடப்படும். அப்போது பட்டியலின மக்கள் கோயிலின் சுற்றுச்சுவர் வெளியே நின்றுதான் சாமி கும்பிடும் நிலை உள்ளது. அவர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. சாதாரண நாட்களிலும் உள்ளே செல்ல அனுமதி இல்லை.
இது சட்ட விரோதம். எனவே, பட்டியலின மக்கள் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இதற்கான போதிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவித்தார். இந்த மனு நீதிபதி தனபால் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், `கோயிலில் சாமி தரிசனம் செய்ய விரும்பும் யாரையும் தடுக்கவில்லை’ என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இந்த கோயிலில் அனைத்து தரப்பு மக்களும் சாமி தரிசனம் செய்ய காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
The post மதுரை ஆண்டார்கொட்டாரம் கோயிலில் அனைத்து தரப்பினரும் தரிசனம் செய்யலாம்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.
