போச்சம்பள்ளி பகுதிகளில் நடப்பாண்டு சப்போட்டா விளைச்சல் அமோகம்: விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி


போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி வட்டாரத்தில் மத்தூர், ஒட்டதெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சப்போட்டா மரங்கள், பல ஆண்டுகளாக ஏக்கர் கணக்கில் வளக்கப்பட்டு வளர்த்து வருகிறது. சப்போட்டா மரங்கள், சுமார் 41 ரகங்களில் உள்ளன. மத்தூர் அருகே பாரண்டபள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி காஞ்சனா, தனது நிலத்தில் பால் சப்போட்டா, பி.கே.எம் சப்போட்டா, பால் கிரிக்கேட் சப்போட்டா, பச்சை கிரிக்கேட் சப்போட்டா போன்ற 4 வகையான மரங்களை, கடந்த 35 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். தற்போது பீக் சீசன் என்று சொல்லப்படும் பிப்ரவரி மாதம் சீசன் துவங்கியுள்ளது. இதனால் மரங்களில் சப்போட்டா காய்கள் கொத்து கொத்தாக காய்த்து தொங்குகிறது.

கடந்தாண்டை விட, இந்தாண்டு சப்போட்டா விளைச்சல் அமோகமாக உள்ளது. சப்போட்டா காய்கள் நன்கு முதிர்ந்து அருவடைக்கு தயாரக உள்ளதால் கர்நாடகா மாநிலம் பொங்களுருவில் இருந்து ஆர்டர் வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் அறுவடை துவங்க உள்ளது. தோட்டங்களில் ஒரு கிலோ பால்சப்போட்ட ₹20க்கும் பி.கே.எம் சப்போட்டா ₹15க்கும், பால் கிரிக்கேட் சப்போட்டா ₹30க்கும், அதிகபட்சமாக பச்சை கிரிக்கேட் சப்போட்டா கிலோ ₹45க்கும் விற்கப்படுகிறது. விளைச்சல் அமோகமாக உள்ளதாலும், மார்க்கெட்டில் நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post போச்சம்பள்ளி பகுதிகளில் நடப்பாண்டு சப்போட்டா விளைச்சல் அமோகம்: விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: