தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவை அன்புமணி ராமதாஸ் புறக்கணித்தார். உட்கட்சி பூசலால் முதல் முறையாக பொங்கல் விழாவில் அன்புமணி மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்கவில்லை. அன்புமணி ராமதாஸ் இல்லாமல் தைலாபுரத்தில் நடைபெறும் முதல் பொங்கல் விழா இதுவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
