குன்னூர் : குன்னூர் நகர திமுக செயலாளர் ராமசாமி தலைமையில் வண்டிப்பேட்டையில் உள் நகர திமுக அலுவலகத்தின் முன்புறம் திராவிட பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இதில், சிறப்பு விருந்தினர்களாக தலைமை உயர்நிலை திட்டக்குழு உறுப்பினர் பா.மு.முபாரக் மற்றும் அரசு தலைமை கொறடா கா.ராமசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
மேலும் இதில் கலந்துகொண்ட பெண் நகர்மன்ற உறுப்பினர்கள் இரு வண்ணங்களில் புடவைகள் அணிந்து பொங்கல் வைத்து பொதுமக்களுக்கு பரிமாறினர்.
இந்த நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளர் வாசிம்ராஜா, பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கதுல்லா, காளிதாஸ், நகர்மன்ற உறுப்பினர்கள் கோபி, தாஸ், சாந்தா சந்திரன், வசந்தி, பாக்கியவதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சுனிதா நேரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேப்போல் குன்னூர் நகராட்சி சார்பாக நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இப்போட்டியில் அரசு பள்ளி மாணவ- மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக கோலப்போட்டி, கட்டுரை போட்டி, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் குன்னூர் நகராட்சி தலைவர் சுசிலா, துணைத்தலைவர் வாசிம்ராஜா, ஆணையாளர் இளம்பரிதி, சுகாதார ஆய்வாளர் சரவணன், நகராட்சி மேற்பார்வையாளர் பரமேஷ், தலைமைக் கழகப் பேச்சாளர் ஜாகீர் உசேன், நகர மன்ற உறுப்பினர்கள் சையது மன்சூர், மணிகண்டன், சமீனா உட்பட பலர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு பொருட்களையும், கேடயங்களையும் வழங்கி ஊக்குவித்தனர்.முன்னதாக டென்ட்ஹில் பகுதியில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் நகர மன்ற உறுப்பினர் சையது மன்சூர் தலைமையில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
குறிப்பாக அங்கு உள்ள முதியோர்கள் மத்தியில் பொங்கல் வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பொங்கலோ… பொங்கல்… என்று முதியவர்கள் கைதட்டி, கூச்சலிட்ட சம்பவம் காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இதில் சில முதியவர்களின் கண்களில் கண்ணீர் வந்ததயடுத்து அப்பகுதி மக்கள் அனைவரும் ஆறுதல் கூறி, அப்பகுதி மக்கள் பொங்கல் விழாவை முதியோர்களுடன் சிறப்பாக கொண்டாடினர்.
