இதில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து நடந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு, அதே பகுதியில் இரட்டை அடுக்கு பஸ் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிரக்டர் டிரெய்லரில் மோதியது. இந்த விபத்தில் பஸ் டிரைவர், ஒரு குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 27 பேர் காயமடைந்தனர். டெல்லியை சேர்ந்த பஸ் பயணிகள் அனைவரும் வாரணாசி, சித்ரகூட் மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய இடங்களை பார்வையிட்ட பிறகு அயோத்திக்கு சென்று கொண்டிருந்தனர் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்த இரண்டு விபத்துகளில் காயமடைந்த அனைவரும் உடனடியாக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக துணைப்பிரிவு நீதிபதி யோகிதா சிங் தெரிவித்தார். இறந்தவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் இந்த விபத்துகள் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் வட்ட அதிகாரி பிரதிமா வர்மா தெரிவித்துள்ளார்.
The post உ.பி.யில் நடந்த இரண்டு வெவ்வேறு சாலை விபத்து: 8 பேர் உயிரிழப்பு, 20க்கும் மேற்பட்டோர் காயம்! appeared first on Dinakaran.
